logo

g
Showing posts with label வாழ்க்கை பந்த‌யம். Show all posts
Showing posts with label வாழ்க்கை பந்த‌யம். Show all posts

Thursday, August 19, 2010

நானும் ஒடிக்கொண்டிருக்கிறேன்


வாழ்க்கை பயணம் ஏனோ பந்த‌யமாகி போனது
நெரிசலில் சிக்கி நசுங்கிய நியாயத்துக்கு
உச் கொட்ட கூட நேரமில்லை எங்களுக்கு
தயக்கமின்றி தவிர்த்து விடுகிறோம் இரக்கங்களை
சகிப்பும் சலிப்பும் நிறைந்த எங்கள் வாழ்க்கையில்
ரசனையும் ஆரோக்கியமும் அந்நியமாகி போனது
தவறுகள் பழகி போனதால் தைரியம் வீணாகி போனது
வாழ்க்கை தேய்மானத்தில் வரண்டு நின்ற போதெல்லாம்
கானல் நீர் கொண்டு தாகம் தீர்த்தோம்
உறவுகள் மறந்த உணர்ச்சிகள் மரத்

இந்த பந்தயத்தில் ஒடிக்கொண்டிருக்கும் ‍ ‍‍‍அல்லது
ஒட்டத்தை ஊக்குவிக்கும் எந்த மேதைக்கும்
தெளிவில்லை எதை நோக்கி இந்
ஒட்டம் என்பதில் மட்டும்
தோற்று விடுவோமோ என்ற பயத்தில் இல்லை
நின்றால் நசுங்கிவிடுவோமோ என்ற பயத்தில்
நானும்
ஒடிக்கொண்டிருக்கிறேன்
                                            ஒட்டத்தின் நடுவில்
          
                                             சத்யா