வாழ்க்கை பயணம் ஏனோ பந்தயமாகி போனது
நெரிசலில் சிக்கி நசுங்கிய நியாயத்துக்கு
உச் கொட்ட கூட நேரமில்லை எங்களுக்கு
தயக்கமின்றி தவிர்த்து விடுகிறோம் இரக்கங்களை
சகிப்பும் சலிப்பும் நிறைந்த எங்கள் வாழ்க்கையில்
ரசனையும் ஆரோக்கியமும் அந்நியமாகி போனது
தவறுகள் பழகி போனதால் தைரியம் வீணாகி போனது
வாழ்க்கை தேய்மானத்தில் வரண்டு நின்ற போதெல்லாம்
கானல் நீர் கொண்டு தாகம் தீர்த்தோம்
உறவுகள் மறந்த உணர்ச்சிகள் மரத்த
இந்த பந்தயத்தில் ஒடிக்கொண்டிருக்கும் அல்லது
ஒட்டத்தை ஊக்குவிக்கும் எந்த மேதைக்கும்
தெளிவில்லை எதை நோக்கி இந்த ஒட்டம் என்பதில் மட்டும்
தோற்று விடுவோமோ என்ற பயத்தில் இல்லை
நின்றால் நசுங்கிவிடுவோமோ என்ற பயத்தில்
நானும் ஒடிக்கொண்டிருக்கிறேன்
ஒட்டத்தின் நடுவில் நெரிசலில் சிக்கி நசுங்கிய நியாயத்துக்கு
உச் கொட்ட கூட நேரமில்லை எங்களுக்கு
தயக்கமின்றி தவிர்த்து விடுகிறோம் இரக்கங்களை
சகிப்பும் சலிப்பும் நிறைந்த எங்கள் வாழ்க்கையில்
ரசனையும் ஆரோக்கியமும் அந்நியமாகி போனது
தவறுகள் பழகி போனதால் தைரியம் வீணாகி போனது
வாழ்க்கை தேய்மானத்தில் வரண்டு நின்ற போதெல்லாம்
கானல் நீர் கொண்டு தாகம் தீர்த்தோம்
உறவுகள் மறந்த உணர்ச்சிகள் மரத்த
இந்த பந்தயத்தில் ஒடிக்கொண்டிருக்கும் அல்லது
ஒட்டத்தை ஊக்குவிக்கும் எந்த மேதைக்கும்
தெளிவில்லை எதை நோக்கி இந்த ஒட்டம் என்பதில் மட்டும்
தோற்று விடுவோமோ என்ற பயத்தில் இல்லை
நின்றால் நசுங்கிவிடுவோமோ என்ற பயத்தில்
நானும் ஒடிக்கொண்டிருக்கிறேன்
சத்யா
2 comments:
தெளிவான வரிகள் சத்யா, நன்றி...........
வாழ்க்கையில் தெளிவோடு எப்போதும் ஓடிக்கொண்டே இருக்க வேண்டும்.... தெளிவு என்பது அனைத்து விசயத்திலும் வேண்டும் வாழ்க்கையில்.... அப்படி ஒரு தெளிவு இருந்தால் ஓட்டம் இருந்தால் போதும், அந்த ஓட்டத்தின் வேகம் ஒரு பிரச்சினை இல்லை.....
அந்த தெளிவோடு நீ ஓடிக்கொண்டிருக்க நான் இறைவனை வேண்டுகிறேன்....
வாழ்க வழமான ஓட்டத்துடன்........
நலமா
நல்ல முயற்சி,
பிழை தவிர்க்க முயலவும்
நட்புடன்
Post a Comment
அன்பான வாசகர்களே..
வந்துப் போனதற்கான தடயங்களை இங்கே விட்டுச் செல்லுங்கள்..