நீ இல்லாத விடியல்கள் - விழிக்குமுன்
நினைவுக்குள் இம்சிக்கிறது விழித்தால் நீ
இருக்க போவதில்லை என்ற நிஜம்
நான் என்னை பார்க்கும் கண்ணாடி முதல்
நீயின்றி எனை பார்க்கும் உலகம் வரை
அத்தனையும் உன்னயே பிரதிபலிக்க
ஒழிய இடமில்லாமல் ஒடும் அகதியானேன்
ஒர் கல்ப கோடி வருடம் வாழ வகுத்து வைத்த
ஆசைகள் அனைத்தும் நினனைவோடு துரத்த
வெள்ளை நான் உடுத்தாத போதும்
வெறுமை எனை உடுத்த
பார்த்திபனாய் செயலற்று நிற்கிறேன் மன குருஷேத்திரத்தில்
உன் ஆடைகளின் ஸ்பரிசமும்
உயிருக்குள் விரிசலாய் விழ
உன் புகை படமுன் கண்ணீரால் இறுகுகிறேன்
இந்த அழுகை உன் மரணம் குறித்தா? என் எதிர்காலம் குறித்தா?
தண்டிக்க துடிக்கிறேன் உடன் கட்டை ஏறுதலை ஒழித்தவனை!
- சத்யா