பிரிந்துபோன பிரியமான தோழிக்கு,
உன்னிடம் சொல்வதற்காக பதபடுத்திவைத்த நிகழ்வுகள் யாவும்
உன்னை சந்திக்கும் முன் பட்டுபோய்விடுமோ என்ற பயத்தில் எழுதும் கடிதம்.
அத்தனையும் இருந்தும் நிறைவாய் இல்லை நம் நாட்கள் போல் இந்நாட்கள்
உன்னுடன் ரசிக்கவும், உன்னுடன் சுவைக்கவும் சேமித்தவைகள் அனைத்தும்
நினைவுகளை தாண்டி நம் பிரிவின் நீளத்தை உணர்த்துகிறது
பகிர்தல் நிமித்தம் இடம் பெறாமையால்
முழுமையடையாமலே முடிந்துவிடுகின்றன என் பொழுதுகள்
அலைபேசியில் உன் குரல் கேட்டு அழுத்துவிட்டது,
நிகழ்ந்தது, நினைத்தது, படித்தது, பார்த்தது, கேட்டது, ரசித்தது என
அத்தனையையும் அனுப்ப முடியவில்லை குறுந்செய்தியில்.
திறக்க படாத உன் மின்னஞ்சலில் பிரிக்கப்படாத
கடிதமாய் உறங்குவதிலும் விருப்பமில்லை எனக்கு.
வேறொன்றும் வேண்டாம் எனக்கு ஒரு முறை உன்னோடு நடக்க வேண்டும்
உலகின் ஒரு விளிம்பிலிருந்து வாழ்வின் மறு விளிம்பு வரை
எழுதிவைத்து செல்வேன் உயிலின் கடைசி வரியாய்
உன் அருகே புதைக்க வேண்டும் என்று
சொல்லி வை உன் குடும்பதினரிடம் உன்னை
எரித்து விட போகிறார்கள்
- சத்யா
- சத்யா
1 comments:
hai akka,
Nan entha kavitaiyai rasithatai ethil mulumiyaga kura mudiyathu neril varukiren.
by
vicky
Post a Comment
அன்பான வாசகர்களே..
வந்துப் போனதற்கான தடயங்களை இங்கே விட்டுச் செல்லுங்கள்..