அறிவாளியாக அறியப்பட்டபின் அத்தனைக்கும்
அனுமதி மறுக்கபட்டது அழுகை உள்பட
வியாபார சந்தையில் இடம் கேட்கையில் -
சொல்வதை சலிக்காமல் செய்பவர்களே போதும்
யோசிப்பவர்கள் தேவையா என
யோசித்து சொல்வதாக ஒரங்கட்டபட்டேன்
குரோதங்கள் வெளிபட்டுவிடுமோ என்ற (சிலரது) பயத்தினாலும்
சுயநலத்தை மறைக்கமுடியாதோ என்ற (பலரது) பதட்டத்தினாலும்
உறவு சந்தையிலும் ஒதுக்கப்பட்டேன்
குடும்ப வழக்கங்களை அப்படியே
பின்நடத்தும் தலையாட்டிகளே போதும்
சிந்தனைவாதிகளுக்கு இடமில்லை என
திருமண சந்தையிலும் நிராகரிக்க பட்டேன்
எப்படியாவது எதிலாவது இணைத்துக் கொள்ள
மனு கோரிய போதெல்லாம்
ஆட்டு மந்தையில் ஓநாய்க்கு இடமேது என பதில் வந்தது
மனிதர் என்பதை மறந்து என்னை ஓநாயாக்குவதற்காக
அவர்களும் ஆடாகி போயிருந்தார்கள்
பகுத்தறிவை வைத்து கொண்டு நான் இப்படி படாதபாடு படுவதைவிட
என்னையும் ஆட்டு மந்தை ஆடாகவே மாற்றிவிடேன் இறைவா!
- சத்யா
2 comments:
உலகத்தில் மக்களோடு மக்களாகவும், மாக்களொடு மாக்களாகவும் தான் வாழ்ந்தாக வேண்டும்....
real lines...
பகுத்தறிவை வைத்து கொண்டு நான் இப்படி படாதபாடு படுவதைவிட
என்னையும் ஆட்டு மந்தை ஆடாகவே மாற்றிவிடேன் இறைவா!.
பகுத்தறிவோடு சிந்திக்கும் நீங்கள் இறைவனிடம் வரம் கேட்காதீர்கள்.மாறிக்கொள்ளுங்கள் அல்லது போராடுங்கள்.
Post a Comment
அன்பான வாசகர்களே..
வந்துப் போனதற்கான தடயங்களை இங்கே விட்டுச் செல்லுங்கள்..