நீ இல்லாத விடியல்கள் - விழிக்குமுன்
நினைவுக்குள் இம்சிக்கிறது விழித்தால் நீ
இருக்க போவதில்லை என்ற நிஜம்
நான் என்னை பார்க்கும் கண்ணாடி முதல்
நீயின்றி எனை பார்க்கும் உலகம் வரை
அத்தனையும் உன்னயே பிரதிபலிக்க
ஒழிய இடமில்லாமல் ஒடும் அகதியானேன்
ஒர் கல்ப கோடி வருடம் வாழ வகுத்து வைத்த
ஆசைகள் அனைத்தும் நினனைவோடு துரத்த
வெள்ளை நான் உடுத்தாத போதும்
வெறுமை எனை உடுத்த
பார்த்திபனாய் செயலற்று நிற்கிறேன் மன குருஷேத்திரத்தில்
உன் ஆடைகளின் ஸ்பரிசமும்
உயிருக்குள் விரிசலாய் விழ
உன் புகை படமுன் கண்ணீரால் இறுகுகிறேன்
இந்த அழுகை உன் மரணம் குறித்தா? என் எதிர்காலம் குறித்தா?
தண்டிக்க துடிக்கிறேன் உடன் கட்டை ஏறுதலை ஒழித்தவனை!
- சத்யா
7 comments:
தண்டிக்க துடிக்கிறேன் உடன் கட்டை ஏறுதலை ஒழித்தவனை!//
பிரிவின் அதிகபட்ச ஏக்கம். அருமையான கவிதை
Good lines pa... But Udan kattai arum palakkathai olithavan thandikka pada vendiyavan alla...
அழகான கவிதை. நிறைய சோகம் ததும்புகிறது.
really super
ஹிமாச்சல் பிரதேசத்தில் , சிம்லா நகருக்கு பொழுது போக்குபூங்கா அமைத்து தர நடவடிக்கை எடுக்க கோரி 10 வயது சிறுமி ஐகோர்டில் வழக்கு தொடர்ந்துள்ளார். இதுதொடர்பாக ஹிமாச்சல் அரசுக்கு நோட்டீஸ் அனுப்பி வரும் ஏப்ரல் மாதம் 4-ம் தேதி பதில் மனு தாக்கல் செய்ய உத்தரவிட்டுள்ளார்.
Read more: http://karurkirukkan.blogspot.com/#ixzz1EwwzZutw
தமிழ்த் தொலைக்காட்சிகளிலும் ஊடகங்களிலும் காட்டுவது போல கணவன் இருக்கும் போதே கள்ளத் தொடர்புகள், திருமணம் புரியாமலேயே மஜா பண்ணிவிட்டு கழட்டிவிட்டு ஓடுதல், திருமணம் செய்யாமலேயே "மகிழ்ச்சியுடன்" இணைந்து வாழ்ந்து விட்டு "இருபுறமும் சம்மதத்துடன்" சந்தோஷமாய் பிரிந்து போதல் போன்றவை மலிந்து போன இந்த காலத்தில் தனது மறைந்த காதலனை நினைத்து சோகக் கவிதை பாடும் குயிலின் நிலை போற்றத் தக்கது. ஆனாலும், //தண்டிக்க துடிக்கிறேன் உடன் கட்டை ஏறுதலை ஒழித்தவனை!// இது சரியல்ல. வாழ்க்கை நிரந்தரமற்றது. எப்போது யார் வேண்டுமானாலும் மடியலாம், தப்பி இருப்பவர் ஏன் தன் வாழ்நாள் முழுவதும் தீயில் வேக வேண்டும், இன்னொரு துணையுடன் மீதப் பயணத்தை தொடரலாமே என்ற எண்ணத்தில் தான் பெண்ணை தீயில் விழ வேண்டாம் என்று தடுத்தார்கள். ஆண் தீயில் விழாமல் இன்னொரு பெண்ணுடன் வாழலாம் என்றால், பெண் மட்டும் சாக வேண்டுமா என்ற சிந்தனை உருவாகி உடன் கட்டை ஏறுதல் ஒழிக்கப் பட்டது. நெருப்பில் உயிருடன் வெந்து போவது அவ்வளவு எளிதா?
நல்ல அருமையான கவிதைங்க
தோழி,
உங்கள் கவிதை அருமை.
வீரம் தில்லை.
www.veram-thilay.blogspot.com
Post a Comment
அன்பான வாசகர்களே..
வந்துப் போனதற்கான தடயங்களை இங்கே விட்டுச் செல்லுங்கள்..