அடையாளம் பெறாத
பிறரின் ரகசிய வலிகளை எழுத்துவிக்கமுடியவில்லை
[அவ்வலிகளுக்கு உடையதாரியாய்
என்னையே உருவகித்துவிடுவார்களோ
என்ற குழப்பத்தில்]
ஏற்கப்படாமல் விமர்சிக்கப்படும் பிறர்
உணர்வுகளை ஏற்றுக் கொண்ட போதும்
அங்கிகரித்தாய் அறிவிக்க முடியவில்லை
[எங்கே! என் அங்கீகாரத்தை சொந்த வாழ்கையோடு
இணைத்து சிலாகித்துவிடுவார்களோ என்ற பயத்தில்]
முக்கால்வாசி உணர்வுகளை
முகமூடியில்லாமல் வெளிபடுத்தமுடியவில்லை
இருந்தும் சொல்லி திரிகிறேன்
நான் நானாக வாழ்வதாகவும்
சுதந்திரம் கிடைத்த அறுபத்து மூன்று ஆண்டுகள்
ஆகிவிட்டாதாகவும்
- சத்யா
0 comments:
Post a Comment
அன்பான வாசகர்களே..
வந்துப் போனதற்கான தடயங்களை இங்கே விட்டுச் செல்லுங்கள்..